Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சிகிச்சைக்காக சென்ற இளம் யுவதி திடீர் மரணம்

T

The Leader Desk

ஜூலை 12, 2023 • 10:46 AM

சிகிச்சைக்காக சென்ற இளம் யுவதி திடீர் மரணம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • பின்னர் 10 ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தனர்.
  • அதன் பிறகு எனது மகள் ICU வில் இருந்து 17 ஆம் நம்பர் வாட்டுக்கு மாற்றப்பட்டார்.
  • சுமார் 3.30 மணியளவில், என் மகளுக்கு சேலைன் கொடுத்தார்கள்.அதன் பிறகு இரண்டு மருந்துகளை ஊசி மூலம் மகளுக்கு செலுத்தினர்.
எழுத்து அளவு:

சுமத்தியுள்ளார்.

அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் பொத்தபிட்டிய அலகல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

சிகிச்சையின் போது அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் “அத தெரண”விடம் தெரிவித்தார்.

"எனது குழந்தைக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். முதலில் கொட்டாலிகொடவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10 ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு எனது மகள் ICU வில் இருந்து 17  ஆம் நம்பர் வாட்டுக்கு மாற்றப்பட்டார். சுமார் 3.30 மணியளவில், என் மகளுக்கு சேலைன் கொடுத்தார்கள்.அதன் பிறகு இரண்டு மருந்துகளை ஊசி மூலம் மகளுக்கு செலுத்தினர். பின்னர் குழந்தையின் கண்களில் ஏதோ நடந்தது, எதோ நடக்கப்போகிறது என்று என் மனம் சொன்னது. அதன் பிறகு என் மகள் பாத்ரூம் போய் சின்க்கில்  தலையை வைத்தார். பின்னர் உடல் நீலமானது, கைகால்கள் நீலமாகி, என் குழந்தை சரிந்து விழுந்தார். நான் அலறியதும், தாதியர்கள் வந்து வாட்டுக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.  அதன்போது எனது குழந்தைக்கு என்ன மருந்து வழங்கீனர்கள் என கேட்டேன். ஆனால் இன்று குழந்தை இல்லை. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். என் குழந்தைக்கு வேறு எந்த நோயும் இல்லை என தாய் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, யுவதியின் மரணம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுவதியின் சடலம் தொடர்பில் தடயவியல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...