Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சாதாரண தர நடைமுறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

T

The Leader Desk

ஜூலை 12, 2023 • 7:55 AM

சாதாரண தர நடைமுறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
  • எவ்வாறாயினும், மேற்கத்திய இசை பாடம் தொடர்பான கேட்கும் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
  • கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட நடைமுறைப் பரீட்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இந்த வருடமும் அதே முறையிலேயே பரீட்சைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட  பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மேற்கத்திய இசை பாடம் தொடர்பான கேட்கும் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி  நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட நடைமுறைப் பரீட்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இந்த வருடமும் அதே முறையிலேயே பரீட்சைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் தபால் மூலம் விநியோகிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைமுறைப் பரீட்சைகளில் சிக்கல் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கலாம் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...