Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'இந்தியா செல்லும் ஜனாதிபதி ஊடாக வடக்கு கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணவும்'

T

The Leader Desk

ஜூலை 12, 2023 • 7:52 AM

'இந்தியா செல்லும் ஜனாதிபதி ஊடாக வடக்கு கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணவும்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்றுக்கொடுக்க வலியுறுத்த வேண்டும் என, அரசியல் தலைவர்களிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கடற்றொழில் அமைச்சர் இணைந்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க வேண்டும்." யாழ்.
  • நமது மீனவர்கள் ஏற்கனவே சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
  • இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

பெற்றுக்கொடுக்க வலியுறுத்த வேண்டும் என, அரசியல் தலைவர்களிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் போது, இந்திய அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டுமென யாழ் கடற்றொழிலாளர் சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் அந்தோனிப்பிள்ளை ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் துரித தீர்வை வழங்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மீனவ சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.

“இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்ந்து எங்கள் கடற்பரப்பிற்குள் நுழைகின்றன. அவர்கள் எங்கள் மீன்களை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும். வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கடற்றொழில் அமைச்சர் இணைந்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க வேண்டும்."

யாழ். குடாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்க தலைவர் பிரான்சிஸ் குரூஸ், இந்திய மீனவர்களின் இழுவை படகுகளால் இந்நாட்டு மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலை கருவிகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றார்.

''குடும்பத்தினரின் தங்க நகைகளை அடகு வைத்தே இந்த வலைகளை வாங்குகிறோம். இந்திய மீனவர்களின் இழுவை படகுகளால் எமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதுடன் எமது மீன்பிடி சாதனங்களும் அழிக்கப்படுகின்றன. நமது மீனவர்கள் ஏற்கனவே சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினால் நிலையான தீர்வை எட்ட முடியும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இந்த பயணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...