Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

T

The Leader Desk

ஜூலை 11, 2023 • 3:57 PM

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய 15 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மரம் அகற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
  • மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் கம்பஹா தரல்வாவில் அமைந்துள்ள 'பன்டு கரந்த' அல்லது க்ரூடியா சிலனிக்கா மரத்தை அகற்ற திட்டமிடப்பட்டது.
  • நேற்று மதியம் வந்த குழுவினர் இருபது நிமிடங்களில் மரத்தை அகற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

இருந்து அகற்றப்பட்டது.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய 15 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மரம் அகற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் வந்த குழுவினர் இருபது நிமிடங்களில் மரத்தை அகற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தனது நிறுவனத்திற்கு தெரியாமல் மரம் அகற்றப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் கட்டுமானத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி 2021 ஆம் ஆண்டு பெப்ரவரியில் கம்பஹா தரல்வாவில் அமைந்துள்ள 'பன்டு கரந்த' அல்லது க்ரூடியா சிலனிக்கா மரத்தை அகற்ற திட்டமிடப்பட்டது.

அப்போது, ​​கம்பஹா மாவட்ட வன அதிகாரி தேவானி ஜயதிலக மற்றும் சுற்றாடல் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்று ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எதிர்ப்பினை வௌியிட்டனர்.

"இது ஒரு குற்றமாகும் மரம் காணாமல் போயுள்ளது, விசாரணை தேவை இது சட்டவிரோதமான செயல் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...