Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நீதவான் தொடர்பில் இனவாத கருத்து; வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் போராட்டம்

T

The Leader Desk

ஜூலை 11, 2023 • 7:15 AM

நீதவான் தொடர்பில் இனவாத கருத்து; வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.
  • முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவுடன் சரத் வீரசேகர எம்.பிக்கு கருத்து வேறுபாடு, கடந்த ஜூலை நான்காம் திகதி ஏற்பட்டது.
  • பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
எழுத்து அளவு:

தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.

குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி விகாரை தொடர்பான வழக்கில் தமிழ் நீதிபதி ஒருவர் தலையிடுவார் எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயற்சிப்பதாக தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவுடன் சரத் வீரசேகர எம்.பிக்கு கருத்து வேறுபாடு, கடந்த ஜூலை நான்காம் திகதி ஏற்பட்டது. குருந்தூர்மலை விவகார வழக்கு அன்றைய தினம் இடம்பெற்ற போது இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சரத் வீரசேகர எம்.பி கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை நீதவான் தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்தே, நீதவான் தொடர்பான இனவாத கருத்து ஒன்றை மேற்படி எம்பி வெளியிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...