Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பாட்டனும், பேரனும் நீரில் மூழ்கி பலி!

T

The Leader Desk

ஜூலை 3, 2023 • 3:27 AM

பாட்டனும், பேரனும் நீரில் மூழ்கி பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
  • மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
  • இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை - இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் பாட்டன், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்துவந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே அவர் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, ஸ்தல விசாரணையை மேற்கொண்டதுடன், நுரைச்சோலை பொலிஸாரும் உறவினர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த இரண்டு சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...