Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி

T

The Leader Desk

ஜூலை 2, 2023 • 5:34 AM

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த மைத்திரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மைத்திரிபால சிறிசேன நேற்று (01) மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.
  • அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
  • அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
எழுத்து அளவு:

மைத்திரிபால சிறிசேன நேற்று (01) மாலை பருத்தித்துறை முனை பகுதியில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரை சந்தித்தார்.

மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ.அன்னராசா, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கடற்றொழிலாளர்களின் சார்பாக உரையாற்றியிருந்தனர்.

சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய மீன்பிடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ட்ரோலர் படகுகளின் அத்துமீறல்கள், சுருக்குவலை சட்டவிரோத செயற்பாடுகள், மீன் வளங்களை அடியோடு சூறையாடுதல், மீன்களின் இனப்பெருக்க காலங்களை கவனிக்காத அத்துமீறிய மீன்பிடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கடற்றொழிலாளர்கள் முன்வைத்தனர்.

சந்திப்பில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் பாரதூரமானவை. அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியவர்களே அதை கவனியாது இருக்கும்போது, நாம் பாராளுமன்றில் எமது காத்திரமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

மேலும், எல்லைதாண்டிய மீன்பிடி தொடர்பாக இந்திய அரச தரப்பை எமது குழுவோடு சென்று சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும் எமது அழுத்தத்தை நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...