Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பொலிஸாரை தாக்கியவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

T

The Leader Desk

ஜூலை 1, 2023 • 9:02 AM

பொலிஸாரை தாக்கியவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போது அவ்வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள் இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட பதில் நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார்.
  • கடந்த சனிக்கிழமை (24) மாலை மன்னார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.
  • இதனால் பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
  • குறித்த சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.
எழுத்து அளவு:

போது அவ்வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள் இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட பதில் நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை (24) மாலை மன்னார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றவர்கள் இனம் காட்டியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸர் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றிருந்த போது பொலிஸார் மீது அவ் வீட்டிலிருந்தவர்கள் கடுமையாக தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி. வினோதன் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த 10 சந்தேக நபர்களையும் நேற்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

இந்த நிலையில் குறித்த 10 சந்தேக நபர்களும் மீண்டும் (30) மன்னார் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.



-மன்னார் நிருபர் லெம்பட்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...