Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

காலநிலை இழப்பீடு வழங்க ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ நிறுவ ஏற்பாடு

T

The Leader Desk

ஜூன் 28, 2023 • 6:10 AM

காலநிலை இழப்பீடு வழங்க ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ நிறுவ ஏற்பாடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள நாடுகளில் “காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை” உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • அதனால், நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • அதற்கமைய, குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:

அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள நாடுகளில் “காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை” உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை பற்றிய உரையாடலில் காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகளுக்குத் தாக்கம் செலுத்துகின்ற தீர்மானம்மிக்க சில துறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றதுடன், நட்டங்கள் மற்றும் இழப்பீட்டு நிதியமொன்றை தாபித்தல் பற்றி கடந்த காலநிலை பற்றிய உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பல்வேறு காரணங்களால், குறித்த நிதியத்தைத் தாபிப்பதில்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலநிலை ரீதியாக இடருக்குள்ளாகின்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அதன் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் அவற்றைத் தழுவிக் கொள்வதற்கான தலையீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தீர்வு முன்மொழிவுகளின் அவசியமான பகுதியாக, குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ‘கடனுக்கான நீதியையும்’ உள்ளீர்த்துக் கொள்வது பொருத்தமென்பதே இலங்கையின் கருத்தாகும்.

அதற்கமைய, குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...