Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை மீட்க முடிவு

T

The Leader Desk

ஜூன் 28, 2023 • 6:08 AM

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை மீட்க முடிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமைய, தற்போது காணப்படுகின்ற ஏதேனும் அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையுண்டு.
  • அதற்கமைய, காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
  • குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது.
எழுத்து அளவு:

ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமைய, தற்போது காணப்படுகின்ற ஏதேனும் அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையுண்டு.

அதற்கமைய, காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. நெதர்லாந்திடமிருக்கின்ற அவ்வாறான 06 தொல்பொருட்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கருத்திட்டத்திற்கமைய, குறித்த தொல்பொருட்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்காகவும், தற்போது பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற இலங்கைக்குரிய தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காகவும் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...