Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பைபிள் மலையும் இலங்கையின் பௌத்த தாழ்வு மனப்பான்மையும்

T

The Leader Desk

ஜூன் 28, 2023 • 6:00 AM

பைபிள் மலையும் இலங்கையின் பௌத்த தாழ்வு மனப்பான்மையும்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொலைவில் இருந்து பார்க்கும்போது இலங்கையின் அனைத்து இன மக்களை போன்று வெளிநாட்டவர்களுக்கும் இயற்கை வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலை அழகாகத் தான் தெரிகிறது.
  • ஒரு மலையைப் பிடித்துக் கொண்டு பௌத்த மதவாதத்தை காண்பிக்காமல் மலையை மலையாகப் பாருங்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
  • இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளால் 21 வது நூற்றாண்டை எப்படி கடப்பது என்பது கேள்விக்குறியே.
எழுத்து அளவு:

தொலைவில் இருந்து பார்க்கும்போது இலங்கையின் அனைத்து இன மக்களை போன்று வெளிநாட்டவர்களுக்கும் இயற்கை வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலை அழகாகத் தான் தெரிகிறது.

இதற்கு வெள்ளையர்கள் "பைபிள் மலை" என்று கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் பைபிள் ஒன்றை வைக்கவில்லை. சிங்களவர்கள் " " பத்தலேகல" என்று பெயரிட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு "பத்தல" (சீனிக்கிழங்கு) நடவில்லை.

இன்னும் பல்வேறு இனத்தினர் எவ்வாறான பெயர்களைச் சொல்லி அழைத்தாலும், இது வெறுமனே ஒரு மலைக்குன்று மாத்திரமே.

ஆனால் தற்போது இந்த மலையை அதாவது மலைக்குன்றை பௌத்த மலையொன்றாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு பௌத்த தாழ்வு மனப்பான்மை என்றே கூற வேண்டும். காரணம், இந்த மலை அடிவாரத்தில் அதிக அளவு முஸ்லிம் மக்களை வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மலையைப் பிடித்துக் கொண்டு பௌத்த மதவாதத்தை காண்பிக்காமல் மலையை மலையாகப் பாருங்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். அத்துடன், தேவையற்ற நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இது வனவளத் திணைக்களத்துக்கு உரித்தானது என்றும் அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆனால், தான் ஜனாதிபதிக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தசாசன அமைச்சின் செயலாளர், குறித்த மலையில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபை அனுமதி கிடைத்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறானவர்களால் தான் இந்த நாட்டின் சுற்றாடல் காட்சி ஒருமைப்பாடு (visual integrity) காணாமல் போய் உள்ளது. மலையை மழையாகப் பார்க்காமல் அதனை அவர்கள் விகாரையாகப் பார்க்கிறார்கள். அல்லது வேறு ஒரு வழிபாட்டுத் தலமாகப் பார்க்கிறார்கள்.

யுனெஸ்கோ கொள்கையின் அடிப்படையில் சூழலியல் உண்மைத் தன்மையை அதாவது உண்மைத் தோற்றத்தை (authentic nature) மாற்றி அமைக்க முடியாது என்பது இந்த அரச அதிகாரிக்கு தெரியவில்லை. அவ்வாறு மாற்றியமைப்பது தவறு என்பதும் இவருக்கு தெரியவில்லை. இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளால் 21 வது நூற்றாண்டை எப்படி கடப்பது என்பது கேள்விக்குறியே.

(சமூக வலைத்தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...