Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பிரபல பொப் பாடகர் ஒருவர் தற்கொலை

T

The Leader Desk

ஜூன் 22, 2023 • 5:06 AM

பிரபல பொப் பாடகர் ஒருவர் தற்கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங்-பாங் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரபலம் அடைந்தார்.
  • கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு, சோதனையான ஆண்டாக அமைந்தது என தகவல்கள் வெளியாகின.
  • இது, அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
எழுத்து அளவு:


பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங்-பாங் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவின் தெற்கு சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோய் சுங்-பாங். 33 வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவின் காட்டேலண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பிரபலம் அடைந்தார்.

பின்னர், கொரிய லேபிள் பாங்பாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாடுவதற்கு ஒப்பந்தம் பெற்றார். தொடர்ந்து இணையதள உலகில் கோலோச்சி வந்த அவர், தன்னுடைய வறுமை நிலையைக் கடந்து இணையத்தில் சாதித்த தருணங்கள் குறித்த நினைவலைகளை வீடியோவாக வெளியிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு, சோதனையான ஆண்டாக அமைந்தது என தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இது, அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், அது வதந்தி எனத் தெரிய வந்தது. இந்த நிலையில், அவர், நேற்று முன்தினம் காலை 9.41 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, “அவர் தனது யூடியூப் சேனலில் பதிவுசெய்யப்பட்ட பதிவாலோ அல்லது அவருக்கு வீட்டில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளாலோ அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோய் சுங்-பாங், தனது தவறுகளை ஒப்புக்கொண்டார் எனவும், அவர் பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர உறுதியளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அவர் ஏதோ ஒரு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பொலிசார் கைப்பற்றி இருக்கும் அவர் எழுதிய குறிப்பு ஒன்றில், "என் முட்டாள்தனமான தவறால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...