Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்?

T

The Leader Desk

ஜூன் 21, 2023 • 3:02 AM

அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை 3 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
  • இதன் அடிப்படையில் அந்த சேவைக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதி முடிவடையும், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • ஆனால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தொடர்பில் இறுதி முடிவு இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:


பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை 3 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

இதன் அடிப்படையில் அந்த சேவைக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதி முடிவடையும், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தொடர்பில் இறுதி முடிவு இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதால், அவர் நாடு திரும்பிய பின்னர் பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கான ஜனாதிபதியின் சிபாரிசு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்? | Tamil Leader | We Lead the Nation