Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

T

The Leader Desk

ஜூன் 20, 2023 • 10:59 AM

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
  • எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
  • சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல - எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறேன்.
  • இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு.
எழுத்து அளவு:
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலணியின் ஊடாகவும் ஆளுநர்களின் தலைமையிலும் மாகாண மட்டத்திலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான விசேட வேலைத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - தற்போது டெங்கு பிரச்சினை மிகவும் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

டெங்கை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றிய அந்தக் குழு நிரந்தரமாக்கப்படவில்லை. எனவே, இந்த தற்காலிக நியமனங்களைப் பெற்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். அப்போது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய முடியும்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல - எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு.

இந்தக் குழுவிற்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. இவர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அடிப்படைத் தகுதிகளைப் பார்க்க முடியாது. தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் போது இவர்களுக்கும் வேலை வழங்குவதற்காக மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு உடன் படவில்லை என நிர்வாக சேவை தெரிவித்துள்ளது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை நான் கைவிட மாட்டேன். இதை மீண்டும் ஒரு முறை அமைச்சரவைக்கு கொண்டு வருகிறேன். தற்போது நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் செய்யும் வேலையைப் பார்க்கும் போது, இந்த சம்பளத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - பொதுவாக நாங்கள் விமர்சனம் செய்கிறோம். ஆனால் சுகாதார அமைச்சரின் சிறந்த நேர்மறையான பதிலுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி செயலணியின் தலைமையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றார்கள்.

மேலும் ஆளுநர்களின் தலைமையில் மாகாண மட்டத்தில் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் டெங்கு ஒழிப்பு பணியில் உள்ளூராட்சி அமைப்புகள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன.

அந்த குழுக்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை. அவர்களின் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...