Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது!

T

The Leader Desk

ஜூன் 19, 2023 • 3:23 AM

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • நேற்று முன்தினம் (17) இரவு களுத்துறை, கல்லஸ்ஷேன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • சந்தேகநபர் இன்று (18) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
  • கடந்த 16ஆம் திகதி இரவு களுத்துறை, கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (17) இரவு களுத்துறை, கல்லஸ்ஷேன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (18) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு களுத்துறை, கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை, பலாதொட, கொடபரகாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமாகாத சுஜித் தர்மசேன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது தலை மற்றும் கழுத்து பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...