Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பெண்ணின் உயிரை பறித்த சாந்திகர்ம பூஜை!

T

The Leader Desk

ஜூன் 18, 2023 • 7:31 AM

பெண்ணின் உயிரை பறித்த சாந்திகர்ம பூஜை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் ஒன்று லக்கல, தாஸ்கிரிய, ஹத்தொட்டமுன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
  • நேற்று (16) மாலை முதல் நேற்று (17) காலை வரை இந்த பூஜை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
  • இதற்கிடையில் பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீர்களை அருந்த கொடுத்துள்ளார்.
எழுத்து அளவு:
சம்பவம் ஒன்று லக்கல, தாஸ்கிரிய, ஹத்தொட்டமுன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

நேற்று (16) மாலை முதல் நேற்று (17) காலை வரை இந்த பூஜை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

லக்கல, தாஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சுகவீனமுற்றிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக இந்த சாந்திகர்ம பூஜை நடாத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீர்களை அருந்த கொடுத்துள்ளார்.

இதன்போது, குறித்த பெண் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மஞ்சள் நீரை அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (18) தம்புள்ளை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், பூஜை செய்த 25 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...