Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கிம்புலாலே குணா உள்ளிட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

T

The Leader Desk

ஜூன் 17, 2023 • 2:46 PM

கிம்புலாலே குணா உள்ளிட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஈடுபட்டதற்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கிம்புலாலே குணா உள்ளிட்ட இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுப்பட்ட குழுவிற்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
  • இது தொடர்பான குற்றப்பத்திரிகைகள் நேற்று (16) தாக்கல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • இந்தக் குழுவில் கிம்புலாலே குணா என அழைக்கப்படும் குணசேகரன், புகுடுகன்னா என்றழைக்கப்படும் புஷ்பராஜா மெஹமட் அஸ்மின், சுனில் காமினி பொன்சேகா, ஸ்டென்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக ரொஷான், வெல்லே சுரங்க, தனரத்ன நிலுக்ஷன், மற்றும் திலிபன் ஆகிய 10 இலங்கையர்கள் உள்ளனர்.
  • இலங்கை மற்றும் இந்தியாவை மையமாக கொண்டு நீண்டகாலமாக சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுப்பட்டதாக அடையாளங்காணப்பட்ட இவர்கள் கடந்த வருடம் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
எழுத்து அளவு:
ஈடுபட்டதற்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கிம்புலாலே குணா உள்ளிட்ட இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுப்பட்ட குழுவிற்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான குற்றப்பத்திரிகைகள் நேற்று (16) தாக்கல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் குழுவில் கிம்புலாலே குணா என அழைக்கப்படும் குணசேகரன், புகுடுகன்னா என்றழைக்கப்படும் புஷ்பராஜா மெஹமட் அஸ்மின், சுனில் காமினி பொன்சேகா, ஸ்டென்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக ரொஷான், வெல்லே சுரங்க, தனரத்ன நிலுக்ஷன், மற்றும் திலிபன் ஆகிய 10 இலங்கையர்கள் உள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவை மையமாக கொண்டு நீண்டகாலமாக சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுப்பட்டதாக அடையாளங்காணப்பட்ட இவர்கள் கடந்த வருடம் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் ஹாஜி சலீம் என்ற கடத்தல்காரனுடன் கிம்புலாலே குணாவின் குழு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கு பணம் வழங்குவதற்கு செயற்பட்டதாகவும் , கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாகவும் இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் சமா்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள், பணம், தங்கம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிம்புலாலே குணா உள்ளிட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை | Tamil Leader | We Lead the Nation