Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கால்வாயில் கலக்கும் பல்கலைக்கழக விடுதியின் மலக் கழிவு

T

The Leader Desk

ஜூன் 17, 2023 • 10:02 AM

கால்வாயில் கலக்கும் பல்கலைக்கழக விடுதியின் மலக் கழிவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர் விடுதியின் கழிவுநீர் அமைப்பு செயற்படாததால் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இந்த மாணவர் விடுதியில் சுமார் 1,500 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
  • ஆனால், சில நாட்களாக, விடுதியின் மலக் கழிவுநீர் கால்வாய் செயல்படாததால், அப்பகுதி கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
  • இக்கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள சுமாா் 20 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீா் விநியோகமாவதுடன், அதில் மலக்கழிவுகள் கலப்பதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
மாணவர் விடுதியின் கழிவுநீர் அமைப்பு செயற்படாததால் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த கழிவுகள், கால்வாய்களில் கலப்பதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இந்த மாணவர் விடுதியில் சுமார் 1,500 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

ஆனால், சில நாட்களாக, விடுதியின் மலக் கழிவுநீர் கால்வாய் செயல்படாததால், அப்பகுதி கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள சுமாா் 20 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீா் விநியோகமாவதுடன், அதில் மலக்கழிவுகள் கலப்பதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் விசாரித்து, அதற்கான தீர்வுகளை வழங்கியும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான தரப்பினா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், தங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...