Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

உலக சாதனை படைத்துள்ள இலங்கை வைத்தியா்கள்!

T

The Leader Desk

ஜூன் 14, 2023 • 9:02 AM

உலக சாதனை படைத்துள்ள இலங்கை வைத்தியா்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீளமான சிறுநீரகக் கல்லை அகற்றி வைத்தியர்கள் சாதனைப்படைத்துள்ளனா்.
  • கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இராணுவ வைத்தியர்களினால் சிறுநீரக கல் அகற்றப்பட்டதுடன், இந்த சிறுநீரக கல் 13.372 சென்றி மீற்றா் நீளமும் 801 கிராம் நிறையும் கொண்டது.
  • கின்னஸ் உலக சாதனைகளின் படி, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிறுநீரக கல் 2004 இல் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அதன் நீளம் 13 சென்றி மீற்றா் ஆகும்.
எழுத்து அளவு:
நீளமான சிறுநீரகக் கல்லை அகற்றி வைத்தியர்கள் சாதனைப்படைத்துள்ளனா்.

இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர், சிறுநீரக மருத்துவ நிபுணா், லெப்டினன்ட் கேணல் சுதர்ஷனின் தலைமையில் கேப்டன் (வைத்தியா்) டபிள்யூ.பி.எஸ்.சி. பதிரத்ன மற்றும் வைத்தியா் தமன்ஷா பிரேமதிலக்க ஆகியோரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேணல் (வைத்தியா்) யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் (வைத்தியா்) சி.எஸ். அபேசிங்க ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து நிபுணர்களாக கடமையாற்றியுள்ளனர்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இராணுவ வைத்தியர்களினால் சிறுநீரக கல் அகற்றப்பட்டதுடன், இந்த சிறுநீரக கல் 13.372 சென்றி மீற்றா் நீளமும் 801 கிராம் நிறையும் கொண்டது.

சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பி.ஏ.சி. பெர்னாண்டோ, யு.எஸ்.பி மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் (வைத்தியா்) கே. சுதுர்ஷன் ஆகியோரால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு காண்பிக்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிறுநீரக கல் 2004 இல் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 13 சென்றி மீற்றா் ஆகும்.

அதிகளவு நிறையுடன் கூடிய சிறுநீரக கல், 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் நிறை 620 கிராம் ஆகும்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...