Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

புதிய தேர்தல் சட்டம்

T

The Leader Desk

ஜூன் 13, 2023 • 9:58 AM

புதிய தேர்தல் சட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கமைய, சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கி குறித்த தேர்தல் சட்டங்களை தனித்தனியாக திருத்தம் செய்வதற்குப் பதிலாக தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் எனும் பெயரிலான புதிய சட்டமொன்றைத் அறிமுகப்படுத்துதல் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:
வழங்கியுள்ளது.

தேர்தலொன்றின் போது போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஒழுக்கநெறிக் கோவை மீறப்படும் போது ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் தினத்தன்று குறித்த வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாததென விசேடமாக அடையாளங் காணப்பட்ட வாக்காளர்களுக்காக விசேட வாக்கெடுப்பு நிலையத்தை அமைப்பதற்காக 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலொன்றிற்கான பெயர்குறித்த நியமன அறிவித்தல் வெளியிடப்படுகின்ற தினத்திலிருந்து ஊடக வழிகாட்டிகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் போன்றவற்றைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கி குறித்த தேர்தல் சட்டங்களை தனித்தனியாக திருத்தம் செய்வதற்குப் பதிலாக தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் எனும் பெயரிலான புதிய சட்டமொன்றைத் அறிமுகப்படுத்துதல் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...