Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?

T

The Leader Desk

ஜூன் 13, 2023 • 9:57 AM

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில் இவ்வருடம் 783 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என கணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
  • ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் வரித் தொகை 923 பில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் கூடி அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து கலந்துரையாடியது.

அங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்க அதிகாரிகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வருடம் 783 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என கணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் வரித் தொகை 923 பில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி 194 பில்லியன் ரூபா வருமானம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாகவும் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்க முடியும் எனவும் சுங்க அதிகாாிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...