Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்!

T

The Leader Desk

ஜூன் 12, 2023 • 4:14 AM

சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
  • இதில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3ஆம் இடம் வகிக்கும் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், நான்காம் நிலை வீரரும் நோர்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
  • பின்னர் அவர் சுதாரித்து விளையாட தொடங்கினார்.
  • சுமார் 3 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை அவர் வீழ்த்தினார்.
எழுத்து அளவு:
என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3ஆம் இடம் வகிக்கும் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், நான்காம் நிலை வீரரும் நோர்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.

ஜோகோவிச்சின் ஆட்டத்தில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. பின்னர் அவர் சுதாரித்து விளையாட தொடங்கினார்.

சுமார் 3 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை அவர் வீழ்த்தினார்.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.

இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடித்து, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இது ஜோகோவிச்சின் 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். மேலும் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...