Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிமன்றம்!

T

The Leader Desk

ஜூன் 9, 2023 • 5:02 AM

டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிமன்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியை விட்டு விலகும் போது பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
  • அவர் எடுத்துச் சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி அளிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொண்டும் அவர் அவ்வாறு செய்யவில்லை எனக் கூறப்பட்டு 7 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
  • நாம் அனைவரும் இணைந்து அமெரிக்காவை ஒரு ஒழுங்கான நாடாக மாற்ற உழைப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.
  • வரும் 2024 ஆம் வருட தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள டிரம்ப்புக்கு இது ஒரு பின்னடைவு எனக் கருதப்படுகிறது.
எழுத்து அளவு:


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியை விட்டு விலகும் போது பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச் சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி அளிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொண்டும் அவர் அவ்வாறு செய்யவில்லை எனக் கூறப்பட்டு 7 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தம்மை மியாமி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “நான் குற்றமற்றவன். ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பெற்றவருக்கு இப்படி ஒரு நிலை வரும் என எண்ணவில்லை. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகும். நாம் அனைவரும் இணைந்து அமெரிக்காவை ஒரு ஒழுங்கான நாடாக மாற்ற உழைப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் வருட தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள டிரம்ப்புக்கு இது ஒரு பின்னடைவு எனக் கருதப்படுகிறது. இது குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஸ்மித் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர்.

டொனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகளின் விவரம் குறித்து இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதில் ஐயம் இல்லை. இது ஒரு முன்னாள் அதிபர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றவியல் குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...