Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

T

The Leader Desk

ஜூன் 7, 2023 • 7:40 AM

மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
  • என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த (05)அன்று அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
  • அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:
அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த (03) அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கிலே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்த போது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவியபோது அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்ட போது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பிலும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார். என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த (05)அன்று அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இருவரும் நீதிமன்றம் முன்னிலைப் படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொண்ட நீதவான் இருவரையும் 7ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. வழக்கு தொடர்பாக சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...