Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்!

T

The Leader Desk

ஜூன் 7, 2023 • 3:21 AM

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
  • ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில் எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்! | Tamil Leader | We Lead the Nation