Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கு வௌிநாடு செல்ல தடை

T

The Leader Desk

ஜூன் 6, 2023 • 10:12 AM

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கு வௌிநாடு செல்ல தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது.
  • (செய்திப் பின்னணி) யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • மருதங்கேணி கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையத்திற்கு அருகில் கடந்த 2 ஆம் திகதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நேற்று (05) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதன்போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:


கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி, அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கும் வரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

(செய்திப் பின்னணி)

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதங்கேணி கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையத்திற்கு அருகில் கடந்த 2 ஆம் திகதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நேற்று (05) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சந்தேகநபரான ஆண் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையின் போது இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் அடையாள அட்டையை காண்பிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...