Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அமெரிக்க தூதுவர் கொட்டகலை விஜயம்

T

The Leader Desk

ஜூன் 6, 2023 • 6:03 AM

அமெரிக்க தூதுவர் கொட்டகலை விஜயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உதவிகளை தொடர்ந்தும் பெற்று தருவதற்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று (05) கொட்டகலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.
  • அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிடோ நிறுவனம் மலையக மக்கள் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாரிய அர்ப்பணிப்பினை செய்து வருகிறது.
  • இவற்றினால் மக்கள் பெற்றுள்ள நன்மைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரிடோ நிறுவனத்தினால் தோட்டங்களில் ஆரம்பித்துள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் எப்படி பலப்பட்டிருக்கின்றன.
எழுத்து அளவு:
உதவிகளை தொடர்ந்தும் பெற்று தருவதற்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று (05) கொட்டகலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவரின் கொட்டகலை விஜயம் குறித்து மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிடோ நிறுவனம் மலையக மக்கள் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாரிய அர்ப்பணிப்பினை செய்து வருகிறது.

இந்த செயல் திட்டங்களில் ஒரு சிலவற்றிக்கு அமெரிக்க நிறுவனங்களினாலும் அமெரிக்க தூதரகத்தினாலுமே நிதியுதவி வழங்கப்படுகின்றன.

குறித்த திட்டங்கள் எவ்வாறு நடபெறுகின்றன. இவற்றினால் மக்கள் பெற்றுள்ள நன்மைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரிடோ நிறுவனத்தினால் தோட்டங்களில் ஆரம்பித்துள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் எப்படி பலப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு கீழ் மட்ட தலைமைத்துவம் வளர்ந்திருக்கின்றது. எவ்வாறு கிராம அபிவிருத்தி சங்கங்கள் தாங்களாகவே அபிவிருத்தி திட்டங்கள் தயாரித்து பிரதேச சபைகள் பிரதேச செயலகங்கள் ஏனைய அரச நிறுவனங்களில் பரிந்துரை செய்து தங்களுடைய உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதனை அவருக்கு எடுத்துரைக்க கூடியதாக இருந்தது.

விசேடமாக மலையகப் பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் மற்றும் பெண்கள் பிரதி நிதித்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் தூதுவர் அவர்களை தெளிவுப்படுத்த கூடியதாக இருந்தது.

விசேடமாக பிரிடோ நிறுவனம் 300 முன்பள்ளிகளையும் 350 பாலர் பாடசாலை ஆசிரியர்களையும் கொண்டு நடத்தும் ஒரு நிறுவனமாக இருப்பதனாலும் அதற்கு அப்பால் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாகவும் பெரும்பாலான மக்களை முறையாக அணி திரட்ட கூடியதாக இருப்பதனால் எங்களுக்கு பெதிருரிதும் பலம் சேர்த்க்கிறது என்பதனை அவர்களுக்கு சொல்லக் கூடியதாக இருந்தது.

அதேநேரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாலர் பாடசாலைகளை கொண்டு நடத்துவதற்கு ஏற்பட்ட சவால்களையும் மலையகத்தில் உயர் கல்வி, தொழில் கல்வி போன்ற விடயங்கள் பல்கலைக்கழகம் சென்றிருக்கின்ற மாணவர்களை பல்கலைகழகத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் காணியுரிமை, வீட்டுரிமை, அரச சேவைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமை போன்றவைகளையும் நாங்கள் சுட்டிக் காட்டி எதிர்காலத்தில் அவர்கள் வழங்குகின்ற உதவிகள் மூலமாக இவற்றை நாம் அடையக்கூடியதாக இருக்கும்.

என்றும் இதுவரை காலம் வழங்கிய உதவியின் காரணமாக ஏற்பட்ட அபிவிருத்திகளையும் அவருக்கு தெளிவாக எடுத்துக் காட்டினோம் அந்த விடயங்கள் தொடர்பாக அவர் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினார் என அவர் மேலும் தெரிவித்தார்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...