Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வரும் இசை 'சர்வதேச நல்லிணக்கத்தில்' ஒன்றிணைவு

T

The Leader Desk

ஜூன் 5, 2023 • 9:31 AM

கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வரும் இசை 'சர்வதேச நல்லிணக்கத்தில்' ஒன்றிணைவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜதந்திரத்தின் 75 வருடங்களைக் குறிக்கும் வகையில், இலங்கையின் சிம்பொனி இசைக்குழுவினால், 2023 ஜூன் 02ஆந் திகதி, வெள்ளிக்கிழமையன்று, லயோனல் வென்டடில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரம்பரிய இசை மாலையை நடாத்தியது.
  • ஜோர்ஜஸ் பிஜெட்டின் 'கார்மென்' இலிருந்து 'ஹபனேரா' மூலம் சோப்ரானோ டிமித்ரி குணதிலக்க பார்வையாளர்களை மயக்கினார்.
  • 'சர்வதேச நல்லிணக்கம்' நிகழ்வானது, இலங்கைக்கு அருகிலுள்ள மற்றும் தொலைதூர நாடுகளுடனான நீண்டகால மற்றும் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த கிழக்கு மற்றும் மேற்கத்திய பாரம்பரியங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் ஓர்கெஸ்ட்ரா இசையின் கலவையை காட்சிப்படுத்தியது.
எழுத்து அளவு:

 

 

 

இராஜதந்திரத்தின் 75 வருடங்களைக் குறிக்கும் வகையில், இலங்கையின் சிம்பொனி இசைக்குழுவினால், 2023 ஜூன் 02ஆந் திகதி, வெள்ளிக்கிழமையன்று, லயோனல் வென்டடில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரம்பரிய இசை மாலையை நடாத்தியது.

 

 

 

'சர்வதேச நல்லிணக்கம்' நிகழ்வானது, இலங்கைக்கு அருகிலுள்ள மற்றும் தொலைதூர நாடுகளுடனான நீண்டகால மற்றும் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த கிழக்கு மற்றும் மேற்கத்திய பாரம்பரியங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் ஓர்கெஸ்ட்ரா இசையின் கலவையை காட்சிப்படுத்தியது.

 

 

 

கொழும்பில் உள்ள ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் நரம்பியல் சத்திரிகிச்சைப் பிரிவில், சிறுவர்களுக்கான நரம்பியல் சத்திரசிகிச்சைக்கான அவசர உபகரணங்களுக்கான நன்கொடைகளை ஆதரிப்பதற்கான ஒரு பணியுடன் கூடிய கொண்டாட்டமாக இந்த இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது.

 

 

 

லெராய் அண்டர்சனின் பளபளப்பான 'பக்லர்ஸ் ஹாலிடே' மற்றும் டிரம்பெட் ட்ரையோ, பாவோ யுவான்காயின் தூண்டுதலான 'மலர்களின் உரையாடல்', விஸ்வநாத் லௌஜியின் சின்னமான 'டான்னோ புடுங்கே', எட்வர்ட் எல்கரின் பிரம்மாண்டமான 'ஆடம்பரம் மற்றும் சூழ்நிலை மார்ச் இல. 4', ஏ.ஆர். ரஹ்மானின் ஏக்கமான 'காதல் ரோஜாவே' மற்றும் கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து பல இசைகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. ஜோர்ஜஸ் பிஜெட்டின் 'கார்மென்' இலிருந்து 'ஹபனேரா' மூலம் சோப்ரானோ டிமித்ரி குணதிலக்க பார்வையாளர்களை மயக்கினார்.

 

 

 

கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் கச்சிதமாக ஒன்றிணைந்து, இசையின் உலகளாவிய மொழியின் மூலம் தடைகளைத் தாண்டி நல்லிணக்கத்தை அடைவதற்கான மனிதகுலத்தின் திறனுக்கு இந்தக் கச்சேரி சான்றாக அமைந்தது.

 

 

 

இலங்கையின் சிம்பொனி இசைக்குழு தெற்காசியாவின் பழமையான இசைக்குழுக்களில் ஒன்றாவதுடன், நிகழ்வின் மரியாதை மற்றும் அது ஊக்குவிக்க விரும்பும் மனிதாபிமான நோக்கத்திற்காக, ரிட்ஜ்வே சீமாட்டி மருத்துவமனை நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு அனைத்து பங்களிப்புக்களையும் செலுத்தும் நோக்கில் கௌரவ அடிப்படையில் இந் நபழ்வு இசைக்குழுவினால் நிகழ்த்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் நலன் விரும்பிகளின் நல்கிய பங்களிப்புக்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாராட்டுகின்றது.

 

 

 

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சுகாதார அமைச்சர் கலாநிதி. கெஹலிய ரம்புக்வெல்ல, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இராஜதந்திரத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொழும்பில் உள்ள ஏனைய சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள கௌரவ தூதரகங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையின் சிம்பொனி இசைக்குழுவின் நிர்வாகம் மற்றும் ஏனைய விஷேட விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

 

கொழும்பு

 

 

 

2023 ஜூன் 04

 

 

........................................

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...