Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஆப்கானை வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றி!

T

The Leader Desk

ஜூன் 4, 2023 • 4:00 PM

ஆப்கானை வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
  • இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
  • துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
எழுத்து அளவு:


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பரீட் அஹமட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, பதிலுக்கு 324 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

துஷ்மந்த சமிர 7 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மஹீஷ் தீக்ஷன மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளன.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 07 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...