Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வங்கியை உடைத்து கொள்ளையிட முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்!

T

The Leader Desk

ஜூன் 1, 2023 • 9:29 AM

வங்கியை உடைத்து கொள்ளையிட முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுமக்கள் கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்டபோது கொள்ளைகாரன் தப்பி ஓடிய சம்பம் இன்று (01) அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதி இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
  • குறித்த வங்கியை வங்கி முகாமையாளர் வழமை போல நேற்று மாலை பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் வங்கியின் பிரான கதவை அலவாங்கினால் உடைத்து அதன் பின்னர் கண்ணாடி கதவை உடைத்து உள் நுழைந்துள்ளான்.
  • இதனை அடுத்து கொள்ளையடிக்க கொண்டுவந்த அலவாங்கு தோல் பை செருப்பு என்பவற்றை மீட்டுள்ளதுடன் பொலிஸ் தடவியல்பிரிவு அழைக்கப்பட்டு மேப்பநாய்களுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:
பொதுமக்கள் கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்டபோது கொள்ளைகாரன் தப்பி ஓடிய சம்பம் இன்று (01) அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதி இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வங்கியை வங்கி முகாமையாளர் வழமை போல நேற்று மாலை பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் வங்கியின் பிரான கதவை அலவாங்கினால் உடைத்து அதன் பின்னர் கண்ணாடி கதவை உடைத்து உள் நுழைந்துள்ளான்.

இதன்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அவசர ஒலி எழுப்பியதை அடுத்து வங்கிக்கு அருகிலுள்ளவர்கள் வெளியே வந்து வங்கியை நோக்கி சென்ற போது கொள்ளையடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்ததை அடுத்து கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்ட போது கொள்ளைகாரன் அவர்கள் மீது கல்லால் தாக்குதல் நடாத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க கொண்டுவந்த அலவாங்கு தோல் பை செருப்பு என்பவற்றை மீட்டுள்ளதுடன் பொலிஸ் தடவியல்பிரிவு அழைக்கப்பட்டு மேப்பநாய்களுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...