Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

T

The Leader Desk

மே 2, 2023 • 4:28 PM

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
  • அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பல்வேறுபட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயற்பாட்டு குழு ஒன்றின் ஊடாக இதன் செயற்பாடுகள் வழிநடத்தப்படும்.
எழுத்து அளவு:

செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயற்பாட்டு குழு ஒன்றின் ஊடாக இதன் செயற்பாடுகள் வழிநடத்தப்படும்.

செயற்திறன் செயற்பாடுகள் தொடர்பிலான சர்வதேச முறைமைகளை ஆராய்ந்து பார்ப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாவதோடு, அதற்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அவுஸ்திரேலிய செயற்திறன் ஆணைக்குழுவின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. அதற்கான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்திருந்தது.

இந்த ஆரம்பமானது இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதை காண்பிக்கும் அதேநேரம், அதனால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...