Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காலி முகத்திடல் மற்றும் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நாளை முதல்...

T

The Leader Desk

மே 2, 2023 • 4:26 PM

காலி முகத்திடல் மற்றும் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நாளை முதல்...

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • நாளை (03) மாலை 7 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார்.
  • மே 04 ஆம் திகதி அதே இடத்தில் பக்திப் பாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
  • மே 05 ஆம் திகதி, ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1,200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.
எழுத்து அளவு:

வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை (03) மாலை 7 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார்.

மே 04 ஆம் திகதி அதே இடத்தில் பக்திப் பாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மே 05 ஆம் திகதி, ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1,200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.

சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் விலிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்யும் வெசாக் அன்னதான நிகழ்வு, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அது மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறும்.

இதற்கு இணையாக மின்விளக்கு அலங்காரத் தோரணங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படை, சிவில் பாதுகாப்புப் படை, இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இராணுவ பக்திப் பாடல் குழுக்களினால் நிகழ்த்தப்படும் பக்திப் பாடல் நிகழ்ச்சி ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...