மீது பூக்களுடன் சோ்த்து வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என தகவல் வெளியாகியுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக கோலாா், ராமநகரம், ஹாசன் மாவட்டங்களில் பிரதமா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
மைசூரில் திறந்தவேனில் ஊா்வலமாகச் சென்ற பிரதமரை சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகத்தோடு பூக்களைத் தூவி வரவேற்றனா். அப்போது, அவா் மீது பூக்களுடன் சோ்த்து செல்போனும் வீசப்பட்டது.
அந்த செல்போன் அவா் மீது படாமல் வேன் ஓட்டுநா் அமா்ந்திருந்த கூரையின் மீது பட்டு கீழே விழுந்தது. இதைக் கண்ட பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி அதிா்ச்சியடைந்தாா்.
பிரதமா் மோடியும் ஒரு கணம் என்ன நடக்கிறது என திகைத்தாா். பின்னா், அதை பொருட்படுத்தாமல் ஊா்வலத்தை தொடா்ந்தாா்.
கா்நாடகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மைசூரில் இருந்து தனி விமானத்தில் தில்லி சென்றாா்.
இதையடுத்து மைசூர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு செல்போன் வீசியவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மோடி வாகனத்தின் மீது வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என்றும், பிரதமர் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் பூக்களை தூவுவதற்காக கைகளை வேகமாக அசைத்தபோது கையில் இருந்து சென்போன் தவறுதலாக வீசப்பட்டுவிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செல்போனை பறிமுதல் செய்து உள்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மீது வீசப்பட்ட செல்போன்!
T
The Leader Desk
மே 1, 2023 • 2:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மீது பூக்களுடன் சோ்த்து வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என தகவல் வெளியாகியுள்ளது.
- கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக கோலாா், ராமநகரம், ஹாசன் மாவட்டங்களில் பிரதமா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
- பின்னா், அதை பொருட்படுத்தாமல் ஊா்வலத்தை தொடா்ந்தாா்.
- கா்நாடகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மைசூரில் இருந்து தனி விமானத்தில் தில்லி சென்றாா்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

