இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் இன்று கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
இதனால் இன்றைய கூட்டம் கட்சி தலைவர் இன்றி நடைபெற்றது. அதன்பின், அக்கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு பதிலாக பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் கட்சியின் தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் ஏனைய பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர்
T
The Leader Desk
ஏப்ரல் 22, 2023 • 1:40 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.
- இதனால் இன்றைய கூட்டம் கட்சி தலைவர் இன்றி நடைபெற்றது.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

