Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜீவன் தொண்டமானின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2023 • 3:59 AM

ஜீவன் தொண்டமானின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும்.
  • அந்தவகையில் இம்முறை பெருநாளை கொண்டாட தயாராகும் இலங்கை மற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  • எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் முடியாட்சியின் போதும் சரி குடியாட்சியின் போதும் சரி இந்த நாடு மேம்பட வேண்டுமென பாடுபட்டவர்களே எமது முஸ்லிம் சகோதரர்கள். எவ்வளவுதான் நெருக்கடிகள் வந்தாலும் ஈகை குணத்தை அவர்கள் கைவிட்டதில்லை. இஸ்லாம் மதம் போதிக்கும் நல்ல விடயங்களை பின்பற்றி வாழ எத்தனிப்பவர்கள். அந்தவகையில் இம்முறை பெருநாளை கொண்டாட தயாராகும் இலங்கை மற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் பல முஸ்லிம் சகோதரர்கள் முதலாளிமார்களாக உள்ளனர். எனவே, தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட அவர்கள் மேலும் பல நகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த நன்நாளில் முன்வைக்கின்றேன்.

இலங்கையில் நோன்பு பெருநாள் காலங்களில் எமது இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிராக சில விஷமிகள் சில தீய செயல்களை கட்டவிழ்த்துவிடுவது நடந்து வருகின்றது. இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் எமது குரல் எப்போதும் ஒலிக்கும்.

இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடைகளை வழங்கி அனைவருமாக அன்போடும், பண்போடும், இறைபக்தியோடும் பெருநாளை கொண்டாடுவோம்." என்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...