Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2023 • 4:20 PM

காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு (15) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.
  • இன்று (16) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
  • சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார்.
எழுத்து அளவு:

பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு (15) புளியங்குளம், புதூர் பகுதியில் உள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.

இன்று (16) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் மூத்த சகோதரர் புதூர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் உழவு இயந்திரத்தில் கடக்கின்ற போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு புகையிரதத்தில் உழவு இயந்திரம் மோதி அவரது நண்பருடன் மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...