Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நாடு தமிழர்களுடையது - நிரூபிக்க வெளிநாட்டு ஆய்வாளர்கள் தேவை..!

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2023 • 8:32 AM

நாடு தமிழர்களுடையது - நிரூபிக்க வெளிநாட்டு ஆய்வாளர்கள் தேவை..!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்பதை நிரூபிக்கமுடியும் என்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • அத்துடன் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை.
  • புதுவருடதினமான இன்று வவுனியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

என்பதை நிரூபிக்கமுடியும் என்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுவருடதினமான இன்று வவுனியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட சிங்களவர்களால் கொண்டுவரப்படும் அனைத்துமே தமிழர்களிற்கு எதிரானதுதான்.

2009 இல் தமிழர்கள் அழியும்போதும் காணாமல் ஆக்கப்படும்போதும் சிங்கள மக்கள் மௌனமாக இருந்தார்கள்.அதனை ஆதரித்தார்கள். தற்போது இந்துகோவில்கள் தாக்கப்படும்போதும் அவர்கள் மௌனமாகவே இருக்கின்றனர். இதுவே இந்த நாட்டின் நிலைக்கு காரணம்.

எனவே ஐரோப்பிய அமெரிக்க உதவிகளுடன் பொதுவாக்கெடுப்பின் மூலம் ஒரு இறையாண்மையான தேசத்தை பெறுவதே தமிழ்மக்களின் இருப்பிற்கான தற்போதைய தேவை.

அத்துடன் தமிழ் ஊழல் அரசியல் வாதிகளை அகற்றி இளைஞர்களின் பங்களிப்புடனான ஒரு புரட்சி ஏற்ப்படும் போதுதான், எமக்கான தீர்வுகிடைக்கும் அதற்கான சூழல் ஏற்ப்பட்டுவருகின்றது.

அத்துடன் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை.

தமிழர்பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னால் இருப்பவர் ரணிலே. 2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இலங்கையின் நீதித்துறை ஒரு நகைச்சுவையாக உள்ளது.இந்து கோவில்கள் மீதான ரணிலின் அடக்குமுறையை தடுப்பதற்கு எவரும் உதவ மாட்டார்கள். எனவே இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் முன்செல்ல முடியும்.

அதன்மூலம் முழுத்தீவும் தமிழர்களுடையது என்பதை நிரூபிக்க முடியும். அந்தவகையில் அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த தீவு யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுவர வேண்டும். இந்தத் தீவின் உரிமையாளர்கள் தமிழர்களே , சிங்களவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.என்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...