Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தனது மார்பகங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பிய கபாலி நடிகை!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2023 • 6:41 AM

தனது மார்பகங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பிய கபாலி நடிகை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே.
  • தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
  • அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோரது நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே.
  • தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
எழுத்து அளவு:

நடிகை ராதிகா ஆப்தே.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. Vaah! Life Ho Toh Aisi! என்ற இந்தி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் ராதிகா ஆப்தே. பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ராதிகா ஆப்தே தொடர்ந்து பெங்காலி, மராத்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராதிகா ஆப்தே.

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோரது நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே.

தொடர்ந்து வெற்றி செல்வன் படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்தார் ராதிகா ஆப்தே. தற்போது பொலிவுட் மற்றும் ஹொலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி ராதிகா ஆப்தேவின் அந்தரங்க போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். ராதிகா ஆப்தேவும் துணிச்சலாக பல கருத்துக்களை பேசி கவனத்தை பெற்று வருகிறார். இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் தான் திரைப்பயணத்தை தொடங்கிய போது எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது பொலிவுட்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கிய போது தனது மூக்கின் அமைப்பு சரியாக இல்லை என்றும் தனது மார்பகங்கள் பெரிதாக இல்லை என்றும் விமர்சித்தார்கள் என்றும் கூறியுள்ளார். மார்பகங்ளை பெரிதாக்கி கொண்டு நடிக்க வாருங்கள் என்றும் தனக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

மேலும் தனது உடல் எடை 3 முதல் 4 கிலோ அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் தங்களின் உரிமையாகவே கருதுவார்கள் என்றும் கூறியுள்ள ராதிகா ஆப்தே, இப்போது யாராவது அப்படி பேசினால் அவர்களை சுட்டுவிடுவேன் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...