Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2023 • 6:39 AM

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
  • இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
  • மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
  • முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது.
எழுத்து அளவு:



ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ஓட்டங்களும், மொயின் அலில் 7 ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜாவுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், 1 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா 25 ஓட்டங்களையும் , தோனி 32 ஓட்டங்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...