Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் நீதி அமைச்சருக்கு முன்வைத்தல்..

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2023 • 6:35 AM

உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் நீதி அமைச்சருக்கு முன்வைத்தல்..   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இயக்கத்தின் பரிந்துரைகளை, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • நீதித்துறை அமைச்சர்னருடனான கலந்துரையாடலின் போது, எமது உறுப்பினர் குழு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக முன் வைத்திருந்தது.
  • சுனில் ஜயசேகர, தலைமைச் செயலாளர், சமூக நீதிக்கான தேசிய இயக்கம் 12/04/2023.
எழுத்து அளவு:

இயக்கத்தின் பரிந்துரைகளை, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது எமது அமைப்பின் உறுப்பினர்கள் குழுவும், சிவில் சமூக அமைப்பினரும் இணைந்து அமைச்சரை சந்தித்து மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும்போது பயங்கரவாதம் தொடர்பில் சரியான வரைவிலக்கணத்தை குறிப்பிட்டு , அதற்கான கட்டளை விதானங்களை அமல்படுத்த வேண்டும் என்பதை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அரசியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டிருக்கும் கருத்து சுதந்திரம் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம், சிவில் உரிமைகள் போன்றவற்றுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடாது என்பது வலியுறுத்தியுள்ளது. மேலும் பயங்கரவாத செயலுடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு , தடுப்பு காவலில் வைப்பதற்கான நீதிமன்றத்தின் வகிபாகத்தை முழுமையாக உறுதி செய்வதின் தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் வரைவில் x பிரிவின் ஊடாக மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்கும் அவசரகால சட்ட ஒழுங்கு முறைகளின் ஊடாக, அமைப்புகளுக்கு தடை விதித்தல், குறிப்பிட்ட இடங்களை தடை செய்யப்பட்ட இடங்களாக பிரகனனப்படுத்துதல் போன்ற விடயங்களை மேற்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இந்த பிரிவை அகற்றி தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களின் கீழ் மேற்படி நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் நடைமுறைகளுக்கு கீழ் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

நீதித்துறை அமைச்சர்னருடனான கலந்துரையாடலின் போது, எமது உறுப்பினர் குழு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக முன் வைத்திருந்தது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் மூன்று முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும், தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் பயங்கரவாத சவால்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்களை நிறைவேற்றுவதை நாம் வரவிருக்கின்றோம். ஆனாலும் தற்போது வரைவு செய்யப்பட்டு இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தில் சில விடயங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேலும் அந்த திருத்த நடவடிக்கைகளின் போது அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பவற்றை வலியுறுத்தியது.

சுனில் ஜயசேகர,
தலைமைச் செயலாளர்,
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
12/04/2023

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் நீதி அமைச்சருக்கு முன்வைத்தல்.. | Tamil Leader | We Lead the Nation