நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரும் அவரது மனைவியும் நேற்று மதியம் முதல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்துள்ளனர்.
விசாரணையில் மனைவி கணவனை பின்னால் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கொலையை செய்த சந்தேக நபரான மனைவியும் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இளம் கணவரை கொலை செய்த மனைவி!
T
The Leader Desk
ஏப்ரல் 10, 2023 • 9:59 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
- விசாரணையில் மனைவி கணவனை பின்னால் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
- சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

