நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எந்தவித அரசியல் தலையீடும் இன்றி போக்குவரத்து கூட்டுதானத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையை மாற்ற என்னால் முடிந்தது.
இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வருமானத்திற்கு அதிகமாகவே செலவு செய்துள்ளனர். எரிப்பொருள் மின்சாரம் என்பவற்றிலும் இந்த நிலைமை உள்ளது. ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்றவற்றால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது.
கொவிட் தொற்றும் வந்தது. அதே போன்று நாம் எடுத்த வரி சுதந்திரம் உள்ளிட்ட தவறான முடிவுகளும் இதற்கு காரணங்களாகும். முன்னாள் அரசாங்கமும் எடுத்த கடனை அடுத்து வரும் அரசாங்கம் செலுத்த வேண்டும். உலகத்திற்கு முன் சண்டியளர்களாக செயற்பட முடியாது. ஆகவே கடனை மீள செலுத்த பிரான்ஸ் நிறுவனம் உதவியை கேட்டுள்ளோம்.
2025 ஆண்டாகும் போது போக்குவவரத்துசபையின் பணத்தை வெளி செல்ல விடாது. பாதுகாத்தால் அதனை உங்களுக்கு மீள வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன் என்றார்.
உலகத்திற்கு முன் சண்டியளர்களாக செயற்பட முடியாது
T
The Leader Desk
ஏப்ரல் 10, 2023 • 6:27 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இதனை கூறினார்.
- அதே போன்று நாம் எடுத்த வரி சுதந்திரம் உள்ளிட்ட தவறான முடிவுகளும் இதற்கு காரணங்களாகும்.
- அவர் மேலும் தெரிவித்ததாவது, எந்தவித அரசியல் தலையீடும் இன்றி போக்குவரத்து கூட்டுதானத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

