Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2023 • 6:26 AM

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
  • கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சமனல வாவி பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவர் கடந்த 8ஆம் திகதி தனது காதலனுடன் சமனல வாவி பகுதிக்கு வந்துள்ளார்.
எழுத்து அளவு:

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமனல வாவி பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவர் கடந்த 8ஆம் திகதி தனது காதலனுடன் சமனல வாவி பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காதலனிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி அவர் வைத்திருந்த பைகள் மற்றும் பணப்பையை சோதனை செய்துள்ளார்.

பின்னர் காதலரின் ஒரு கையில் கைவிலங்கு இட்டு, கைவிலங்கின் மற்றப் பகுதியை மோட்டார் சைக்கிளில் இணைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் சமனல வாவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்கனவே யுவதியின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மொனராகலை பிரிவில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்! | Tamil Leader | We Lead the Nation