Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2023 • 6:25 AM

நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300 மீற்றர் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்ததாகவும் அவர்களில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
  • கண்டி, தித்தவெல வீதி பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • மற்றைய மாணவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அங்கு நீராடச் சென்ற வேளையில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:



நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300 மீற்றர் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்ததாகவும் அவர்களில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய இரு மாணவர்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டதுடன், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி, தித்தவெல வீதி பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மற்றைய மாணவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை செவனகல வளவை கங்கையில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அங்கு நீராடச் சென்ற வேளையில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...