Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஹரக் கட்டாவுடன் தொடர்பு - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2023 • 11:16 PM

ஹரக் கட்டாவுடன் தொடர்பு - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கான்ஸ்டபிளுடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 74 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
  • புறக்கோட்டை சிறிகொத்த கட்டிடத்திற்கு முன்பாக காரில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட மிரிஹான உப பிரிவில் கடமையாற்றும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கான்ஸ்டபிளுடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 74 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புறக்கோட்டை சிறிகொத்த கட்டிடத்திற்கு முன்பாக காரில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர், புறக்கோட்டை டெய்சி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, ​​மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளின் ஒருங்கிணைப்புடன், மாத்தறை வெலிகம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் இரண்டு கையடக்க தொலைபேசிகளுடன் மிரிஹான பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹரக் கட்டாவுடன் தொடர்பு - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! | Tamil Leader | We Lead the Nation