Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றில் மோதல்! - ஒருவர் பலி!

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2023 • 3:02 PM

சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றில் மோதல்! - ஒருவர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்ணன் தம்பி ஆகிய இரு சகோதர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அண்ணன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
  • சம்பவம் தொடர்பில் சகோதரன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
  • சம்மாந்துறை வண்டு வீதி மலையடிக் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீராமுகைதீன் மஹ்றூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • குறித்த பிரதேசத்திலுள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டம் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு பள்ளிவாசலில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட சிலர் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடிந்ததும் நிர்வாக தெரிவை செய்யுமாறு கோரியுள்ளனர்.
எழுத்து அளவு:

அண்ணன் தம்பி ஆகிய இரு சகோதர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அண்ணன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சகோதரன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்..

சம்மாந்துறை வண்டு வீதி மலையடிக் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீராமுகைதீன் மஹ்றூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டம் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு பள்ளிவாசலில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட சிலர் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடிந்ததும் நிர்வாக தெரிவை செய்யுமாறு கோரியுள்ளனர். மற்றுமொரு குழுவினர் சிலருடன் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதையடுத்து அண்ணன் தம்பியான இரு சகோதரர்களுடைய குழுக்களுக்கிடையே முறுகல் நிலை எற்பட்டதையடுத்து புதிய நிர்வாக தெரிவை எதிர்வரும ஞாயிற்றுக்கிழமை (09) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்களான அண்ணன் தம்பியான இரு சகோதரர்களை கொண்ட குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் அண்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உயிரிழந்தவரின் சகோதரான தம்பி உட்பட 3 பேரை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...