Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டத்தில் மோதல் - ஒருவர் பலி

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2023 • 10:44 AM

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டத்தில் மோதல் - ஒருவர் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
  • இதனை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.
  • மேலும் இம் மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.
எழுத்து அளவு:

கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்த மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இம் மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...