Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2023 • 6:34 AM

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ.
  • என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு.
  • என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:



நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு | Tamil Leader | We Lead the Nation