Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மக்கள் படும் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2023 • 2:05 PM

மக்கள் படும் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்படத்தக்க இடத்தில் இருக்கும் நாடாக முன்னேறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் 27 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
  • எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் இருபத்தி ஆறு கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் ஊடாக 21,577,650 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
  • மேலும் பிரபஞ்சம் வேலைத் திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

உண்மை நிலையை அறிய குளிரூட்டி அறையை விட்டு வெளியேறி கிராமம் தோறும் மூளை முடுக்குகளுக்குச் சென்று பார்க்குமாறும், நாட்டிலுள்ள சில பாடசாலைகளைப் பார்த்தால் இடிந்து விழும் கட்டிடங்களைத் தான் காணக்கிடைத்தாலும், இவ்வாறான கஷ்டப் பாடசாலைகளுக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் சர்வதேச விமான நிலையங்கள் கூட நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்படத்தக்க இடத்தில் இருக்கும் நாடாக முன்னேறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் 27 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 27 ஆவது கட்டமாக 924,000 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் இருபத்தி ஆறு கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் ஊடாக 21,577,650 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத் திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...