Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம்

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2023 • 11:21 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 26 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (06) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
  • எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் இருபத்தி ஐந்து கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 20,653,650.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
  • மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டுமானால்,அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு கல்வி முறை சரியாக அமுலாக்கப்பட வேண்டும் எனவும், நாட்டின் கல்வித்துறையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாமல் அனைவரும் ஆங்கில மொழிக் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 26 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (06) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 26 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் இருபத்தி ஐந்து கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 20,653,650.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

உலகில் ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வரையில் நாம் உள்ளக ரீதீயாக மாவீரர்களாகவே எண்ணிக்கொண்டாலும், நாடு உலகிற்கு திறந்து விடப்பட்டு சர்வதேச போட்டித் தன்மைக்குள் பிரவேசிப்போமேயானால் நாம் மிகவும் கீழ்நிலையில் தான் இருப்போம் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் பாடசாலைகளால் மின்கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் தலைநகரின் கண்ணாடி அறைகளுக்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டின் தலைவர்கள் டிஜிட்டல் புரட்சி குறித்து பேசும்போது கிராமப்புற பாடசாலைகளில் IT ஆசிரியர்கள் இல்லை என்றும், சில ஆசிரியர்கள் 2 பாடசாலைகளில் IT கற்பிக்கும் நிலை காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரன்மினிதென்ன வித்தியாலயத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் போது மின்சார சபையினர் மின்சாரத்தை துண்டிக்க வந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த பாடசாலையின் நிலுவை மின்கட்டணமும் செலுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...